மன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்
முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார மாதிரிகளை பா.ஜ.க அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும், தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண தேவையான தொலைநோக்குப் பார்வை மத்திய அரசுக்கு இல்லை என்றும், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார பாதையை மாற்றியமைத்ததுதான் தற்போது பெரும் சவாலை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே மீண்டும் மன்மோகன்சிங் பின்பற்றிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு பின்பற்றினால் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுவிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.