மன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்!

மன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்!

இனப்பெருக்க அமைப்பு: ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள், குழந்தையின்மைக் குறைபாடு, ஆண்மைக் குறைபாடு மற்றும் குறைந்த பாலியல் உந்துதல்.

மூட்டு மற்றும் சதைப்பகுதி: உடல் வலி, தோள்பட்டை வலி, வீக்கங்கள் ஏற்படும். எலும்பின் அடர்த்தி குறையும்.

இதயம்: வேகமான இதயத் துடிப்பு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இதயம் தொடர்பான நோய்கள்.

சருமம்: முகப்பரு, தடிப்பு, சிரங்கு, ஒவ்வாமை மற்றும் தோல் தடித்தல்.

வயிற்றுப் பகுதி: குடல் அழற்சி நோய், அடிவயிற்று வலி, அஜீரணம், எரிச்சலுடன் கூடிய குடல் நோய், வயிற்றுப் புண், உணவு ஒவ்வாமை, வயிறு பிடிப்பு, குமட்டல் மற்றும் எடை ஏற்ற இறக்கம்.

குடல் பகுதி: ஊட்டச்சத்தைக் குறைந்த அளவே கிரகிப்பது, வளர்சிதை விகிதம் குறைவது, சர்க்கரை நோய், நச்சுகளைக் குறைந்த அளவே வெளியேற்றுவது.மேலும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

நோய் எதிர்ப்பு அமைப்பு: நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் நாள்பட்ட உடல் நலக் குறைவு ஏற்படும். மோசமான மனநிலை, கோபம், எரிச்சல், ஆற்றல் இல்லாமை, பீதி, பதற்றம், கவனமின்மை போன்ற எதிர்மறை குணங்கள் உண்டாகும்.

கணையம்: இன்சுலின் அதிகமாகச் சுரப்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் தமனிகள் சேதமடைகின்றன.

Leave a Reply