மம்தா பற்றி திரைப்படத்திற்கு தடை!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றிய திரைப்படத்தின் டிரைலருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றிய திரைப்படமான “பாகினி” என்ற படத்தின் டிரைலருக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. மனு அளித்தது
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் ‘பாகினி’ திரைப்படத்தின் டிரைலருக்கு தடை விதித்துள்ளது