மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டம்
எஃகு உலோகத்துக்கு பதிலாக மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
தற்போது கார்கள் ‘ஸ்டீல்’ எனப்படும் எக்கு உலோக பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன.
அதன் எடையை குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மரத்தில் உள்ள ‘பைபர்’ எனப்படும் நாரிழைகள் மூலம் கார் தயாரிக்க பயன்படும் உலோக கலவை உருவாக்கப்பட உள்ளது. அது எக்கு (ஸ்டீல்) உலோகத்தை விட 5-ல் ஒரு பங்கு எடை மட்டுமே கொண்டது.
அதன் எடை மிகவும் குறைவு, அதே நேரத்தில் 5 மடங்கு பலம் வாய்ந்தது. அதற்கான ஆய்வை ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழக நிபுணர்கள் மேற் கொண்டுள்ளனர். அதை ஜப்பானின் டென்கோ கார்பரேசன், டொயோட்டோ, டய்க்கோ நிஷிகவா கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள உள்ளன.
மரக்கட்டைகள் மூலம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி வருகிற 2020-ம் ஆண்டுக்குள் முடியும் என நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.