மரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு
கேரளாவில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பெரும்பாதிப்பு காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்த பேரிடர் கனமழையால் ஏற்பட்டிருந்தாலும் நிலச்சரிவுக்கு ஒட்டுமொத்த காரணம் மரங்கள் அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்புதான். இயற்கையை அதன் போக்கில் விடாமல் பணத்திற்காக மரங்களை வெட்டுவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும்தான் இதுபோன்ற பேரழிவுக்கு காரணமாக உள்ளது.
இந்த நிலையில் சட்டீஸ்கர் அரசு இனிமேல் இறந்தவர்களை எரிக்க மாட்டுச்சாணத்தினால் ஆன எருவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பல நகரங்களில் எருவினால்தான் பிணங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 கோடி இந்துக்கள் மரணம் அடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் பிணங்களை எரிக்க மரக்கட்டைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக எருவினை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எருவினால் ஏற்படும் புகை உடல்நலத்தையும் பாதிக்காது. சட்டீஸ்கர் அரசு போல் மற்ற மாநில அரசுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.