மருத்துவமனையில் அனுமதிக்காத பெண்ணுக்கு தெருவோரம் பிறந்த குழந்தை: அதிர்ச்சி தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்காத பெண்ணுக்கு தெருவோரம் பிறந்த குழந்தை: அதிர்ச்சி தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசவத்துக்காக வந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் அவர் தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரைச் என்ற நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு கர்ப்பிணிப்பெண் ஒருவர் பிரசவத்துக்காக வந்துள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த அந்தப் பெண் மருத்துவமனையின் வெளியே தெருவோரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது குறித்துத் தகவல் அறிந்த மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளர் சிங், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Leave a Reply