மருத்துவமனையில் டிக்டாக் வீடியோ: நர்ஸ்களுக்கு நோட்டீஸ்

மருத்துவமனையில் டிக்டாக் வீடியோ: நர்ஸ்களுக்கு நோட்டீஸ்

ஒடிசா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டிக்டாக் வீடியோ எடுத்த 3 நர்ஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரி மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் பணியாற்றி வரும் 3 நர்ஸ்கள், அந்த பிரிவிலேயே டிக்டாக் வீடியோக்களை எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானதை அடுத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தில் டிக்டாக் வீடியோ எடுத்தவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, அந்த செவிலியர்களுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

Leave a Reply