சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி அவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் கழிவறை சுத்தமாக இருக்கின்றதா என ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் Trauma Care பிரிவிற்கான கட்டிட கட்டுமான பணிகளை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சேகர்பாபு, அண்ணன் தயாநிதி மாறன் எம்பி ஆகியோருடன் சென்று பார்வையிட்டேன்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அண்மையில்ஆய்வு செய்தபோது,அங்குள்ள கழிவறைகளை சுகாதாரமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். இந்நிலையில் மருத்துவமனைக்கு மீண்டும் இன்று ஆய்வுக்காக சென்றபோது கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டேன்
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அண்மையில்ஆய்வு செய்தபோது,அங்குள்ள கழிவறைகளை சுகாதாரமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். இந்நிலையில் மருத்துவமனைக்கு மீண்டும் இன்று ஆய்வுக்காக சென்றபோது கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டேன்@PKSekarbabu @Dayanidhi_Maran pic.twitter.com/LD5Z0ufZwW
— Udhay (@Udhaystalin) June 8, 2021
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் பழையனவாக இருந்ததால், அவற்றுக்கு பதில் புதிய படுக்கைகளை அமைத்து பிற வசதிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தேன். அதன் பேரில் நடைபெறும் பணிகளை இன்று பார்வையிட்டேன்.@PKSekarbabu @Dayanidhi_Maran pic.twitter.com/NX4c57ZEqH
— Udhay (@Udhaystalin) June 8, 2021