மருத்துவர் இல்லாததால் செவிலியர் பார்த்த பிரசவம்: பரிதாபமாக குழந்தை உயிரிழப்பு

மருத்துவர் இல்லாததால் செவிலியர் பார்த்த பிரசவம்: பரிதாபமாக குழந்தை உயிரிழப்பு

திருச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவர் இல்லாததால் அந்த சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது

திருச்சி அந்தநல்லூர் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பவித்ரா என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் மருத்துவர் இல்லாததால் பவித்ராவுக்கு வேறுவழியின்றி செவிலியர் ரம்யா என்பவர் பிரசவம் பார்த்துள்ளார். ஆனால் பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் பவித்ராவின் உறவினர் செவிலியர் மீது குற்றம்சாட்டி உள்ளனர்

சரியான நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லாததால் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என்றும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பவித்ராவின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply