மருத்துவர் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை:

முக்கிய அறிவிப்பு வெளிவருமா?

மருத்துவர் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் முக்கிய அறிவிப்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது

மேலும் அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது என்றும், அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான் என்றும், இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது என்றும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்

Leave a Reply