மலிவு விலையில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்: விலை மற்றும் வெளியீட்டு தேதி
இந்திய டெலிகாம் சேவையின் அடுத்த அதிரடியை துவங்க ரிலையன்ஸ் ஜியோ தயாராகி வருகிறது. அந்த வகையில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை இந்த ஆண்டு தீபாவளி சீசனில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் 100 ஜிபி டேட்டா ரூ.500க்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோ ஃபைபர் வரவுக்கு முன்னரே பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க துவங்கியுள்ளது. இதே போல் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோ வரவால் அதிக பாதிப்பை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஜியோ பிராட்பேண்ட் சேவைகள் மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் இலவச பிரீவியூ சலுகையின் கீழ் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இண்டர்நெட் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பிராட்பேண்ட் சேவைகளின் விலை ரூ.500 முதல் துவங்குகிறது, இதில் 600 ஜிபி டேட்டா மற்றும் 1000 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் மாதம் ரூ.2000 செலுத்த வேண்டும்.
இந்த சாதனங்களுடன் எச்டி டிவி, வீடியோ ஆன் டிமாண்ட் மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளது. இத்துடன் லேண்ட்லைன் போன் சேவைகளை வழங்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.