மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: கனிமொழியின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்
மலேசிய சிறையில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்கள் உள்பட 49 இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்
கனிமொழி எம்பியின் இந்த கோரிக்கைக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ், வரும் ஜனவரியில் தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்தியர்கள் 49 பேர்களும் ஆஜர்படுத்தப்பட்டு நிலுவை ஊதியத்துடன் இந்தியர்கள் மீட்கப்படுவர் என்று கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்