மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு

மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு

மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இனி விசா எடுக்க தேவையில்லை என மலேசிய அரசு அறிவித்துள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சலுகை இந்தியர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் சுற்றுலா பயணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவர்கள் மலேசியாவிலிருந்து திரும்புவதற்கான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மலேசியாவிற்கு 15 நாட்கள் சுற்றுப் பயணம் செய்யலாம். இதற்கு எந்தவித விசாவும் தேவையில்லை

ஆனால் குறிப்பிட்ட பயண திட்டத்தின்படி 15 நாட்களுக்குள் அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பி விட வேண்டும். இந்த சலுகையை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 26 வரை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் ஒருமுறை மலேசியாவுக்கு சென்ற இந்தியர்கள் மீண்டும் 45 நாட்கள் கழித்துதான் மலேசியா செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply