மலேசிய மணல் விவகாரம்: தமிழக முதல்வர் அவசர ஆலோசனை
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சற்றுமுன்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்த முதல்வர் அவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மணல் குவாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
தற்காலிக உரிமம் வழங்க வழிமுறைகளையும் இன்று அரசு தெரிவிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.