வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்விபத்துகளை எப்படி? என்பது குறித்து மின்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மின்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மரக்கிளைகளை அகற்ற…
*மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு, ஆடு, மாடு, போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது.
*மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவேண்டும்.
*மழைக்காலததில் இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கவேண்டும். (கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1912).
*இடி, மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் இத்தகைய மின் சாதனங்களின் இணைப்பு வயரை பிளக்கிலிருந்து அகற்றி வைக்கவேண்டும். பழுதான மின்சாதனங்கள்
*மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவைக்கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரைக்கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும்.
*வீட்டின் சுவர்களில் மின்சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்துவிடவும். அதன்பின் மின்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
*சைக்கிள் செயின், கம்பிகள், பச்சைக்கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின்கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்றவேண்டும். சுவிட்சை அணைத்த பிறகு…
*குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. பிளக் சுவிட்சை அணைத்த பிறகே மின்விசிறி, அயன்பாக்ஸ், செல்போன், சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்கவேண்டும்.
*தரைகளை கழுவும்போது ஈரக்கைகளால் இணைப்பிலிருக்கும் டேபிள்பேன் போன்றவற்றை நகர்த்தக்கூடாது. அவற்றை முன்னதாகவே மின் இணைப்பிலிருந்து அகற்றிவிட வேண்டும்.
*கிரைண்டர் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில (எர்த்) இணைப்பு கொடுக்கவேண்டும். மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின்சாதனைத்தையும் இணைக்கக்கூடாது. பழுதான சுவிட்ச், பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்த வேண்டும். வயரிங் வேலைகள்
*சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்ப் மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழை நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே மின்சார வயரிங் வேலைகளை செய்யவேண்டும். ஈரக்கையால் சுவிட்ச் போடக்கூடாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.