மாடி கடையை வாடகைக்கு எடுத்து கீழேயுள்ள நகைக்கடைக்கு துளை போட்ட கொள்ளையர்கள்
சென்னை கொளத்தூர் ரெட்டேரி அருகில் உள்ள கடப்பா தெருவில் முகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார் . இவரது நகைக்கடைக்கு மேல் உள்ள கடையை வடமாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜவுளிக்கடை வைக்க கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்ல கடையை பூட்டிவிட்டு சென்ற முகேஷ்குமார் மீண்டும் மாலை கடையை திறந்தபோது சீலிங் பகுதியில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 3.5 கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையர்கள் பணத்தையும், நகையையும் மூட்டை கட்டி கொண்டு செல்லும் காட்சி அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.