மாணவர்களின் மாவட்டத்திலேயே இனி நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை தமிழக மாணவர்கள் சிலர் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எழுதினர். இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை சென்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இனிவரும் ஆண்டுகளில் மாணவர்கள் அவரவர் சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதலாம் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தேசிய கல்வி கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். தமிழில் கேள்வித்தாள்களை தயாரிக்க நல்ல தமிழ் மொழி பெயர்ப்பார்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும்.