மாணவர்களுக்காக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளிநாட்டில் கல்வி பயில மாணவர்களுக்கு ரூ .7.30 லட்சம் முதல் ரூ .1.50 கோடி வரை கடன் வழங்குகிறது.
இந்த கடனுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதம் ஆகும். இந்த கடனில் பெண்களுக்கு 0.50 சதவீதம் வரை தள்ளுபடியும் உண்டு.
எஸ்பிஐ குளோபல் எட்-வாண்டேஜ் என அழைக்கப்படும் இந்த லோன் திட்டத்தின் கீழ் வழக்கமான பட்டதாரி படிப்பு மற்றும் முதுகலை பட்டம் படிக்க நினைப்பவர்கள் லோன் பெறலாம்.
இந்திய மாணவர் 15 ஆண்டுகளில் கடன் பணத்தை திருப்பிச் செலுத்தலாம் என்பது இந்த கடனில் அளிக்கப்படும் கூடுதல் சிறப்பாகும்