மாணவிகளை தவறாக பயன்படுத்த முயன்ற கோவை விடுதி உரிமையாளர் திடீர் மரணம்
கோவையில் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த விடுதி உரிமையாளர் இன்று கிணறு ஒன்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று அவர் உயிரற்ற உடலாக மீட்கப்பட்டார்.
கோவை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன், அங்கு தங்கிய மாணவிகள், இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்த பல்வேறு வகைகளில் முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் வார்டன் புனிதா விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கனிவாக பேசி வலை விரித்துள்ளார்.
இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெகநாதன் மற்றும் புனிதாவை போலீசார் தேடி வந்தனர். இருவரும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகினர். அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த தனியார் ஜெகநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெல்லை ஆலங்குளம் அருகே கிணற்றில் இருந்து ஜெகநாதன் உடலை போலீசார் மீட்டனர். ஜெகநாதன் உயிரிழப்பு, தற்கொலையா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.