* நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சியளிக்கிறாள். கல்விகளில் புலமைத்துவம் பெற விரும்புபவர்கள் இந்த தேவியை வழிபட்டால், பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
* சிருங்கேரியில் சரஸ்வதி தேவியானவள், மாணவி வடிவில் படிக்கின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தேவியை வழிபட்ட பின்னரே பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
* சரஸ்வதி தேவியின் கையில் எப்போதும் வீணை இருக்கும். ஆனால் வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.
* கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில் நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.