மாதம் ஒரு முறை அமித்ஷா வருவார்: பாஜக தலைவர் தகவல்
தெலுங்கா மாநில பாஜக தலைவர் லட்சுமண் நேற்று தனது கட்சி தொண்டர்களிடையே பேசியபோது, ‘அமித்ஷாவை கடந்த முறை சந்தித்தபோது அவர் மாதம் ஒரு முறை தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்து நலத்திட்டங்கள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்யவுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் இரண்டு மத்திய அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கு வந்து மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.
எனவே அடுத்ததாக தெலுங்கானா மாநிலத்தை கைப்பற்ற பாஜக குறி வைத்துவிட்டது என்பது தெரிகிறது