மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறைக்கு ரூ.600 கட்டணம்: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
பிரதமர் மோடி மற்றும் சின அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர்களின் வருகை காரணமாக மாமல்லபுரம் என்ற சுற்றுலா பகுதி உலகப்புகழ் பெற்றது என்பது அறிந்ததே
இரு பெரும் தலைவர்களின் வருகைக்கு பின் மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
புராதன சின்னமான வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது