மாமியாரால் கோடிக்கணக்கான சொத்தை இழந்த மகளும் மருமகனும்: அதிர்ச்சி தகவல்

மாமியாரால் கோடிக்கணக்கான சொத்தை இழந்த மகளும் மருமகனும்: அதிர்ச்சி தகவல்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் கள்ளக்காதல் காரணமாக அவரது மகளுக்கும் மருமகனுக்கும் கிடைக்கவேண்டிய கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து 25 வாலிபர் ஒருவரை தேர்வு செய்து தனது மகளுக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார்

ஒரே மகள் மற்றும் கோடிக்கணக்கான சொத்து இருப்பதால் மருமகனையும் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டார். இந்த நிலையில் மாமியாருக்கும் இன்னொரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு வந்து போவதும் இருந்ததாகவும், மாமியாரை எதிர்த்து பேச முடியாத காரணத்தால் இது குறித்து மருமகன் எந்தவித கேள்வியும் கேட்காமல் கண்டும் காணாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மாமியாரை அடிக்கடி பார்க்க வந்த கள்ளக்காதலன் அவருடைய சொத்துக்களை எல்லாம் தந்திரமாக தனது பெயருக்கு எழுதி வாங்கி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் மாமியாருக்கும் அவரது கள்ளக்காதலனும் பிரச்சனை வந்தபோது அவருடைய அனைத்து சொத்துக்களும் கள்ளகாதலன் பெயருக்கு மாறியது போல் தெரிந்த அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து தற்போது மாமியாரும் அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் நடுத்தெருவுக்கு வந்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply