மாம்பழத்தில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன தெரியுமா?
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையானதும் தேன் சுவை ஊட்டுவதும் மாங்கனியே.
இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாம்பழம் அதிகம் விளைகிறது.
சுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் அதிகம் விளைகின்றன.
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் விவரம் வருமாறு:-
* மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.
* மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். * நரம்பு தளர்ச்சியை போக்கும்.
* மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.
* மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.
* ரத்தஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.
* தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்