மாம்பழம் வாங்க ஆளில்லை

குடோனில் குவிந்து கிடக்கும் மாம்பழங்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் அல்போன்சா மாம்பழங்கள் இந்த ஆண்டு மிக அதிகமாக நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது

ஆனால் அவைகள் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த போதிலும் மாம்பழ வியாபாரிகள் போதுமான அளவிற்கு வரவில்லை. அப்படியே ஒரு சில வியாபாரிகள் வந்தாலும் மாம்பழங்களை பெரிய அளவில் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் மாம்பழங்கள் வாங்குவதற்கு ஆளே இல்லை என்றும் இதனால் தங்களுடைய ஆயிரக்கணக்கான கிலோ மாம்பழங்கள் குடோனில் குவிந்து கிடப்பதாகவும் மாம்பழ வியாபாரிகள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

கிட்டத்தட்ட தங்களுக்கு சுத்தமாக வியாபாரமே இல்லை என்றும் இதனால் குடோனில் இருக்கும் மாம்பழங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழுகிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் நாங்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர்தான் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது

Leave a Reply