மாருதியை பின்னுக்கு தள்ளிய ஹூன்டாய் கிரான்ட்
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் கிரான்ட் i10 மாடல் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விற்பனையை முந்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மாருதி நிறுவனத்துடன் ஒப்பிடும் போது ஹூன்டாய் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை விட ஹூன்டாய் கிரான்ட் i10 அதிகளவு விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் கிரான்ட் i10 மாடல் 28,516 மற்றும் மாரதி சுசுகி ஸ்விஃப்ட் 25,250 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.
இத்துடன் கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது ஹூன்டாய் நிறுவன விற்பனை மாருதியை விட அதிகமாக இருந்துள்ளது. கிரான்ட் i10 மாடல் 78,125 யுனிட்களும் ஸ்விஃப்ட் 78,053 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
கிரான்ட் i10 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் 4-ஸ்பீடு டார்கியூ மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் குறையை மாருதி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் மாடலை வெளியிட்டு சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மாடல் வெளியாக குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்விஃப்ட் மாடல் HEARTECT தளம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் உயர் ரக ஸ்டீல் கொண்டிருப்பதால் வாகனத்தின் ஒட்டுமொத்த எடை குறைக்கப்படுகிறது. இதனால் புதிய ஸ்விஃப்ட் மாடலும் 50 கிலோ எடை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்விஃப்ட் எடை குறைவதால், வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும். புத்தம் புதிய ஸ்விஃப்ட் டிசையர் மாடலிலும் இதே நிலை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் ஒரே மாதிரியான இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 82 bhp மற்றும் 112 Nm செயல்திறன், 1.3 லிட்டர் ஃபியாட் மல்டிஜெட் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் 75 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரன்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
இத்துடன் முதல் முறையாக ஸ்விஃப்ட் மாடலில் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த கார் முந்தைய மாடல்களை விட அதிக இடம் பெற்றிருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவுகளில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.