மார்ச் 4ல் தொடங்கும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

மார்ச் 4ல் தொடங்கும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடிந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் 4ஆம் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தை விஜயா புரடொக்சன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘வாலு’, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். விவேக்-மெர்வின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் எம்.பிரபாகரன் கலை இயக்கத்தில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் பிரவீன்.கே.எல். படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

Leave a Reply