மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
லாட்டரி வியாபாரி மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கை மாஜிஸ்திரேட் விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
லாட்டரி வியாபாரி மார்ட்டின் உதவி\ பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இவரது மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்ய மறுக்கவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பழனிச்சாமி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது