‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் திடீரென போராட்டம் செய்த பாஜக
விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் திடீரென நிறுத்தப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் இந்த படப்பிடிப்பில் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வருமான வரி சோதனை முடிவடைந்து இன்று மீண்டும் விஜய் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக
ஆனால் திடீரென மீண்டும் பாஜக தொண்டர்களால் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்எல்சி சுரங்கத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு அனுமதி தரக்கூடாது என்று கோரிக்கை விடுத்து பாஜக தொண்டர்கள் போராட்டம் செய்து வருவதால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாஜக விஜய்யை குறி வைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜகவின் இந்த போராட்டம் அதனை உறுதி செய்வது போல் இருப்பதாக கூறப்படுகிறது