மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பரபரப்பு

மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பரபரப்பு

கோவை இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்ட மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து தீவிபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விமானத்தில் இருந்து கீழே விழுந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதாகவும், அந்த பள்ளத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து மிக்-21 விமானம் சூளூர் விமான தளத்தில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்து விழ்ந்த பெட்ரோ டேங்க் தரிசு நிலத்தில் ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த பெட்ரோல் டேங்க் 1200 லீட்டர் கொள்ளவு கொண்டது. இந்தப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்திவருகின்றனர்

Leave a Reply