மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து சர்ஜிக்கல் அட்டாக் செய்த இந்திய ராணுவம் தற்போது மியான்மர் நாட்டின் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது

70 கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டுள்ள இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பல தீவிரவாதிள் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே நாகலாந்து பயங்கரவாதிகள் மியான்மர் எல்லையில் முகாம்கள் அமைத்து தங்கியிருந்ததாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய நிலையில் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply