மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி படம்தான்: உண்மையை ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்

மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி படம்தான்: உண்மையை ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்

பெரும்பாலான தமிழ் நடிகர்கள் மோசமான தோல்வி படத்தையும் வெற்றிப்படம் என்று கூறிக்கொண்டு அதற்கு சக்சஸ் மீட் பார்ட்டியும் வைப்பதுண்டு.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன், ‘மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி படம் தான் என உண்மையை ஒப்புக்கொண்டதோடு, ‘இனி தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரியாக தான் இருக்கும் என உறுதியளித்துள்ளார்.

இந்த தகவலை அவர் இன்று நடைபெற்ற நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட இசை வெளியீட்டின் போது தெரிவித்தார். மேலும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்ததா? என தெரியவில்லை. தொழில்ரீதியாக அனைவருக்கும் நான் லாபமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். தோல்வியிலும் என்னுடம் பயணிக்கும் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ என கூறியுள்ளார்.

Leave a Reply