மீட்புப்பணி நிறுத்தப்படுகிறதா? அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சியில் பெற்றோர்
ரிட் இயந்திரம் எதிர்பார்த்த அளவு சுரங்கத்தை தோண்டாததால் இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது சுர்ஜித்தின் பெற்றோர் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, கடந்த 64 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளைக்கு அருகில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. ஆனால் பாறைகள் இடையில் இருப்பதால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகத்திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டும் இந்த இயந்திரத்தாலும் வேகமாக தொண்ட முடியவில்லை
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கணித்தபடி இரண்டு இயந்திரங்களாலும் பள்ளம் தோண்ட முடியவில்லை. மணப்பாறை பகுதியில் பாறைகள் கடினமானதாக இருக்கின்றன. இவ்வளவு கடினமானப் பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை. ஒரு அங்குல அளவில் குழந்தையின் மேல் மண் விழுந்துள்ளது. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இதுகுறித்து துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மீட்புப்பணி நிறுத்தப்படுமோ? என்ற அச்சம் பலரது மனதில் எழுந்துள்ளது