மீண்டும் சாவித்திரி கேரக்டரில் நடிக்கும் கீர்த்திசுரேஷ்
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ மற்றும் ‘மகாநதி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அதுமட்டுமின்றி இந்த படம் மூலம் கீர்த்தி சுரேசின் மார்க்கெட் உயர்ந்தது. ராஜமவுலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் கீர்த்திசுரேஷூக்கு சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். படத்தை இயக்க இருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி.
இவர் மகாநதி திரைப்படத்தில் இயக்குநர் நாகி ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கிருஷ் தான் இயக்கும் என்டிஆர் வாழ்க்கை படத்துக்காக மீண்டும் ஒருமுறை கீர்த்தியை சாவித்திரியாக்க முடிவெடுத்து இருக்கிறார்.