மீண்டும் தர்மபுரியில் அன்புமணி போட்டியா?

மீண்டும் தர்மபுரியில் அன்புமணி போட்டியா?

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதியை பெற்றுள்ள பாமக, தர்மபுரியில் மீண்டும் அன்புமணியை வேட்பாளராக நிறுத்தும் என கணிக்கப்படுகிறது. மேலும் அதிமுகவிடம் இருந்து பெற்ற ஒரு மாநிலங்களவை தொகுதியில் அன்புமணியின் மனைவி செளம்யா போட்டியிடுவார் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ‘தமிழக மக்களின் நலனுக்காகவே நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 7 பேர் தமிழர்கள் விடுதலை, தமிழகத்தில் உள்ள பாசன திட்டங்கள் உள்பட பா.ம.க. அளித்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலும் தர்மபுரி தொகுதியில் கட்சி தலைமை அனுமதித்தால், மீண்டும் போட்டியிடுவேன் என்றும் அன்புமணி தெரிவித்தார்.,

Leave a Reply