மீண்டும் ‘பிகில்’ பாடல் லீக்கா? ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெணே பாடல் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விரைவில் வெளியாகவுள்ள ‘வெறித்தனம்’ பாடலும் லீக் ஆகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
பிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடல் திடீரென இணையத்தில் லீக் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
‘வெறித்தனம்’ பாடல் லீக் ஆகவில்லை என்றும், இது வெறும் வதந்தி என்றும் லீக் ஆனதாக கூறப்பட்ட பாடலுக்கும் பிகில் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.