மீண்டும் பிளே ஸ்டோருக்கு வந்தது டிக்டாக் செயலி!
டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டதால் அதனை டவுன்லோடு செய்யும் வசதியை பிளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்
இதனையடுத்து டிக்டாக் செயலியை நீக்குமாறு மத்திய அரசு கூகுளுக்கு கடிதம் எழுதியதால் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அளிக்கப்பட்ட இந்த வழக்கின் உத்தரவு ஒன்றில் நிபந்தனைகளுடன் டிக்டாக் செயலியை அனுமதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தடை நீக்கப்பட்டதால் டிக்டாக்கை டவுன்லோடு செய்யும் வசதியை பிளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.