மீண்டும் புயல்: 4 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று கோரத்தாண்டவம் ஆடி கோடிக்கணக்கான பொருட்சேதத்தையும் சுமார் 40 உயிர்களையும் பலி கொண்ட நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 18,19 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கும் 19,20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கும் 18,19,20 ஆகிய தினங்களில் தெற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக புயல் உருவாகுமா? அல்லது கனமழை மட்டும் பெய்யுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்