மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வடகொரிய அதிபர் அறிவிப்பு

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வடகொரிய அதிபர் அறிவிப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்த நிலையில் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.

கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், வர்டகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்

Leave a Reply