மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு. மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு. மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

1நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா இன்று 6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்வருக்கும் அமைச்சர்களுக்கு கவர்னர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையும், 2011 முதல் 2016 வரையும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் அவர் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply