மீண்டும் மோகன்லாலுடன் இணையும் கீர்த்திசுரேஷ்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘கீதாஞ்சலி’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் மோகன்லால் படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் பிரியதர்ஷன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த படத்தில் மோகன் லாலின் இளவயது கதாபாத்திரத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை அறிமுகப்படுத்திய கூட்டணி என்பதால் நன்றிக்கடனுக்காக 5 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் நடிக்கிறார்.