மீன் வறுவல்

மீன் வறுவல்

என்னென்ன தேவை?

மீன் துண்டுகள் – 10

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூள்

தயிர் – 2 டீஸ்பூன்

சீரகத் தூள் – அரை டீஸ்பூன்

பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

நல்லெண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, மீன் துண்டுகள் மீது தடவிக் குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள். தோசைக் கல்லைக் காயவைத்து மீன் துண்டுகளைப் பரப்பி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சிவக்க வறுத்தெடுங்கள்.

Leave a Reply