மீரா மீதுனுக்கு ஜாமீன் மறுப்பு: நீதிமன்றம் அதிரடி

பட்டியலினத்தவர் களைச் சேர்ந்தவர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மீதுனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்

இதனை அடுத்து அவர் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

இந்த நிலையில் மீராமிதுன் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது