அண்ணா பல்கலை மாணவர் சாதனை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனா வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது என்பது தெரிந்ததே இருப்பினும் ஒரு சிலர் மாஸ்க் அணியாமல் வெளியே வருவதால் அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
இந்த நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயம் மாஸ்க் அணிய மேல் இருப்பவர்களுக்கு அபராதம் விதித்தும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனை அடுத்து தற்போது மாஸ் அணியாதவர்களை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராகுல் புகழேந்தி என்பவர் உருவாக்கியுள்ளார்
இந்த கண்காணிப்பு கருவியில் நவீன கேமரா இருக்கும். அது ஒரு மீட்டருக்கும் குறைவாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள், முகக்கவசம் அணியாத நபர்கள் அவர்களை வேறுபடுத்திக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அவர்கள் அருகில் வந்தவுடன் ஒலி எழுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து அவர்களை இனம் கண்டு பிடித்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது