முகிலனை விசாரிக்க 3 மணிநேரம்: நீதிமன்றம் அனுமதி

முகிலனை விசாரிக்க 3 மணிநேரம்: நீதிமன்றம் அனுமதி

சமூக செயற்பாட்டாளர் முகிலன் சமீபத்தில் திடீரென காணாமல் போன நிலையில் கடந்த 7ஆம் தேதி திருப்பதியில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் காரணமாக முகிலன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது

இந்த நிலையில் 15 நாள் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முகிலனை விசாரிக்க தங்களுக்கு மூன்று நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் அந்த அனுமதியை மறுத்த நீதிபதி, முகிலனை 3 மணி நேரம் மட்டுமே விசாரிக்க அனுமதி அளித்தார்.

மேலும் விசாரணையின்போது முகிலனின் வழக்கறிஞர் உடன் இருப்பார் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த விசாரணை இன்று நடைபெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால் இன்னும் சற்று நேரத்தில் முகிலனிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply