முக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின்

முக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின்

சமீபத்தில் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து அணையில் இருந்த தண்ணீர் வீணாகியதை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம். எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் அலட்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் முக்கொம்பு மதகுகள் உடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கடந்த 24ம் தேதி முதல்வர் இங்கு பார்வையிட்டு, பணிகள் விரைவில் முடிவடையும் என உறுதி அளித்தும், இன்னும் 40 சதவீதம் பணி கூட முடியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

மேலும் கோமா நிலையில் தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி, மதகுகள் உடைய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆனால் ஆட்சியில் உள்ளவரக்ள் இதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும், எனவே விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply