முக ஸ்டாலினை சந்தித்த கோலமாவு ஹீரோக்கள்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று கோலம் போட்ட 6 கல்லூரி மாணவிகளும், 3 இளைஞர்களும் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.
இதுகுறித்து முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! என்று தெரிவித்துள்ளார்.
மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது!
எடப்பாடி அரசுக்கு நன்றி! #DMKkolamProtest pic.twitter.com/qEx1Zx1Qvm
— M.K.Stalin (@mkstalin) December 30, 2019