முடிவுகள் வரும் முன்பே கல்வேட்டா? ஓபிஎஸ் மகனுக்கு கண்டனம்
மக்களவைத் தேர்தல் முடிவுகள் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்பியாகி விட்டதாக கல்வெட்டு வைத்திருப்பது தொகுதி மக்களை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் மே 23ம் தேதிதான் எண்ணப்படவுள்ளன. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். அதாவது, ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், குச்சனூரில் இடம்பெற்றுள்ளது.
காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16ஆம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.