முடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்

முடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான டோக்கன் வழங்கும் இயந்திரங்கள் இன்று காலை முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதையடுத்து தானியங்கி டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக, பேப்பரில் டிக்கெட் முறையில் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால், அந்த டிக்கெட் வழங்க போதிய பணியாளர்கள் இல்லாததால் டோக்கன் வழங்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு சரிசெய்யப்படும் வரை இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்தது. இதன்படி, காலை 6 மணி முதல் பயணிகள் இலவசமாக பயணித்துள்ளனர்.

கிட்டதட்ட 4 மணி நேரம் மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணித்தனர். இந்நிலையில், டோக்கன் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து, தற்போது டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply