முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7: இனி என்ன ஆகும் கம்ப்யூட்டர்

முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7: இனி என்ன ஆகும் கம்ப்யூட்டர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 வரும் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஓஎஸ்-ஐ பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10 என்ற ஒஎஸ் அறிமுகம் செய்யப்பட்டாலும் இன்னும் பலர் விண்டோஸ்7 ஒஎஸ்-ஐ அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பயன்படுத்துவதற்கு மிகவும் எளிது என்பதே இதன் ஒரே காரணமாக இருந்து வருகிறது

இந்நிலையில் விண்டோஸ்7 மென்பொருளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 14ஆம் தேதிக்கு பின் விண்டோஸ் 7 கம்ப்யூட்டர்கள் இயங்குமா? என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது. விண்டோஸ் 7 ஒஎஸ் உள்ள கம்ப்யூட்டர் வழக்கம்போல் இயங்கும் என்றும் ஆனால் அதை பயன்படுத்தும்போது மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விண்டோஸ்7-ன் ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10 மென்பொருளை அதன் இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

Leave a Reply